அம்பத்தூர் சண்முகபுரம், நேதாஜி நகரை சேர்ந்தவர் மேக்ஸ்வெல் (வயது 50). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் நேற்று மாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் மேக்ஸ்வெலை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மேக்ஸ் வெலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேக்சுவலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மேக்ஸ்வெல் என்பவருக்கு மோசஸ் மற்றும் லாரன்ஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு உதயகுமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மோசஸ், லாரன்ஸ் கைது செய்யப்பட்டனர்.
அதற்கு பழி தீர்க்கும் விதமாக மோசஸ் மற்றும் லாரன்சின் தந்தையான மேக்ஸ்வெல் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.