வீட்டு மனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் கோரிக்கை

85பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் கிராமத்தில் வசித்து வரும் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு
வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில் அங்குள்ள அரசு கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தில் சவுடுமண் குவாரி அள்ளுவதற்கு மூன்று மாதம் அனுமதி வழங்கிய நிலையில் சவுடு மண் குவாரியை அப்பகுதியில் செயல்படுத்தக் கூடாது தங்களுக்கு அப்பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் வேறு இடத்தில் குவாரிக்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறி பல்வேறு கட்டமாக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர் பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக அப்பகுதியில் தற்போது மண்குவாரி செயல்படாமல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்த பொது மக்களிடம் குறைகளைக் கேட்க வந்த பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் சுந்தரத்திடம் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய தங்களை
போலீசார் கைது செய்ததாகவும் குடும்ப அட்டை வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி ஒப்படைக்காமல் அவர்களே வைத்துக்கொண்டு
கிராம நிர்வாக அலுவலர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் தங்களுக்கு ஆட்சேபனை இல்லாத அரசு கல்லாங்குத்து இடத்தில் வீட்டு மனை பட்டா வழங்க எஸ்சி எஸ்டி ஆணையத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு தங்களுக்கு உதவிட வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி