கும்மிடிப்பூண்டி பகு தியில், அரசு மதுக்கடை - இயங்காத நேரத்தில், மதுக் கடை அமைந்துள்ள பகு திகளில், அதிக விலைக்கு 'சரக்கு' விற்கப்படுவதாக புகார்கள் வந்தன.
அதை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட சோதனையில், மாதர் பாக்கம் பகுதியில் அதிக விலைக்கு சரக்கு விற்ற பெருமாள், 27, ஆரம்பாக்கம் பகுதியில் கண்ணம்பாக்கம் விஜயகுமார், 40, ஆகிய இருவர் கைது செய் யப்பட்டனர்.
அவர்கள் மீது, கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக் கின்றனர்.