பூண்டி அணையில் நேற்று முன் தினம் 2000 கன அடி உபரி நீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்ட வந்த நிலையில் அது படிப்படியாக குறைக்கப்பட்டு 500 கன அடியாக ஆனது இந்த நிலையில் நேற்று 500 கன அடியாக குறைத்து அதனை தற்போது முழுவதுமாக தண்ணீர் வெளியேற்றுவதை நிறுத்திவிட்டனர் இதனால் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனடியில் தற்போது 3 231 மில்லியன் கன அடி நிரம்பி கடல் போல் காட்சி தருகிறது இன்று புத்தாண்டை முன்னிட்டு பூண்டி அணையின் அழகை பார்ப்பதற்கும்
கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வெளியேற்றும் பகுதியில் உபரி நீர் வெளியேற்றப் படாத நிலையிலும் 35 அடி முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சி தந்த பூண்டி அணையை ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று குழந்தைகளுடன் வந்து பார்த்து ரசித்தனர். மதகுகளில் உபரி நீர் கசிந்து வீணாக வெளியேறும் பகுதிகளில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீரை சென்னை செங்குன்றம் ஆவடி அம்பத்தூர் கும்மிடிப்பூண்டி பெரியபாளையம் பொன்னேரி மட்டுமின்றி ஆந்திர மாநிலம் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆன்மீக சுற்றுலா வந்திருந்த பக்தர்களும் ஆர்வத்துடன் பூண்டி அணை முழு கொள்ளளவு எட்டி இருந்ததை சுற்றி பார்த்து ரசித்தனர் மேலும் சூரிய அஸ்தமனத்தை பூண்டி அணை லிங்க் கால்வாய் பகுதியில் நின்ற வண்ணம் குழந்தைகள் பெண்கள் என ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்