கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நேரு மகன் எழில்குமாரன், 14. தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன். நேற்று முன்தினம், தாய், தந்தை, வேலைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் பாட்டியுடன் இருந்துள்ளார்.
வெளியே செல்வதாக கிளம்பி சென்றவர், வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவரைப்பற்றிய தகவல் கிடைக்காததால், அவரது தந்தை அளித்த புகாரில் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.