ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

79பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி பகுதிகளில் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் ஊராட்சி சார்பாக அனைத்து வார்டு உறுப்பினர்களுடன் குடிநீர், மின்விளக்கு, சாலை அமைத்தல், 100நாள் வேலை தருதல், அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் மற்றும் கலைஞர் கனவு இல்லம் ஆகிய பல்வேறு திட்டங்களை ஊராட்சி சார்பாக நிறைவேற்றி தரப்பட்டு வருகிறது
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒட்டி உள்ள கும்மிடிப்பூண்டி பேரூராட்சியுடன் இணைப்பதற்காக அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் அது மட்டுமல்ல கும்மிடிப்பூண்டி பேரூராட்சியை நகராட்சியாக மாற்றுவதற்கு போதிய மக்கள் தொகை இல்லாத காரணத்தினால் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சுற்றியுள்ள புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி, பெத்திகுப்பம், தேர்வழி, ஆத்துப்பாக்கம், வேற்காடு, சித்தராஜ் கண்டிகை ஊராட்சிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருவதால்
இதனை அறிந்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் அஸ்வினி சுகுமாரன், துணை தலைவர் எல்லப்பன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், 100 நாள் பணியாற்றம் பொதுமக்கள் ஆகியோர் ஜிஎன்டி சாலையிலிருந்து பேரணியாக கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி