திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ளது வேளகாபுரம் கிராமத்தில் பொது சுடுகாடு ஒன்று இருந்தது. இந்நிலையில், ஊர் மக்களுக்காக சுடுகாடு அமைக்க சிலர் நிலம் தானமாக தருவதற்கும் முன் வந்துள்ளனர். ஆனால், பம்மல் மானிய திட்டத்தில் எரி மேடையுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எரிமேடை ஒன்றை அமைத்தனர். இந்நிலையில், ரோஸ் ரெட்டியார் என்பவர் மரணம் அடைந்தார். ஊர் மக்களுக்கு என தனியாக சுடுகாடு அமைத்து தரவேண்டும் என ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ராஜேஷ்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், வருவாய்த் துறையினர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில்
எரிமேடையுடன் அமைக்கப்பட்ட சுடுகாட்டை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினர். இதற்கு ஊர் மக்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் ரோஸ் ரெட்டியாரின் உடலை அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் முடிவு செய்து கொண்டு சென்றனர். அவ்வாறு அடக்கம் செய்யக்கூடாது என வட்டாட்சியர் தலைமையில் வந்த வருவாய்த் துறையினரும், போலீசாரும் தடுத்தனர். இதனால் உடலை சாலையின் நடுவே வைத்து விட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசத் தீர்வு எட்டப்படவில்லை தங்களுக்கு தனி சுடுகாடு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.