முருகன் கோவில் ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏலம் கேட்க யாரும் முன் வராததால் அதிகாரிகள் ஏமாற்றம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, ஆண்டார் குப்பத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது, இங்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடி மற்றும் பிரசாதம் விற்பனை செய்ய ஆண்டுதோறும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொது ஏலம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஏலம் செயல் அலுவலர் ராகவன் தலைமையிலும், ஆய்வாளர் முருகன் முன்னிலையிலும் நடைபெற்றது இதற்காக 37 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர், அதன்படி இந்த ஆண்டு காணிக்கை முடிக்கு 2 லட்சத்து 92 ஆயிரமும், பிரசாத விற்பனைக்கு 12 லட்சத்து 92 ஆயிரம் ஆரம்பகட்ட தொகையாக நிர்ணிக்கப்பட்டு, தனித்தனியே 2 விண்ணப்ப வரவேற்பு பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு புதிதாக 18% ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக' வைப்புத் தொகை காண டிடி இன்றி காணிக்கை முடிக்கான பெட்டியில் 4 விண்ணப்ப மனுக்கள் மட்டுமே போடப்பட்டிருந்தது. இதனால் காணிக்கை முடி நிர்ணிக்கப்பட்ட தொகையை விட கூடுதல் என்பதால், 4 லட்சத்தி 10 ஆயிரத்திற்கு ஏலம் போனது, ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக கோவில் பிரசாதம் விற்பனை செய்வதற்கான ஏலத்தை கேட்க யாரும் முன் வராததால் ஏமாற்றமடைந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீண்டும் வேறொரு தேதியில் கோவில் பிரசாத விற்பனை ஏலம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.