கார் விபத்தில் தாய் - மகள் பரிதாபமாக உயிரிழப்பு

589பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஓலா கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதில் திருவள்ளூரை சேர்ந்த தாய் - மகள் கணவன் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தனர். ஓலா கார் ஓட்டுனரும் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த இருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள அலமாதி கிராமத்தில் ஓலா தனியார் காரில் திருவள்ளூர் செங்குன்றம் நெடுஞ்சாலையில் சென்டர் மீடியங்களில் மோதி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான காரில் இருந்த தாய் உஷாராணி மகள் சாய் மோனிஷா நான்கு வயது ஓலா கார் ஓட்டுநர் அணஸ் 30 ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருவள்ளூரைச் சேர்ந்த தந்தை கிருஷ்ணமூர்த்தி சாய் மோகித் ஆகியோர் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தாய் மகள் மூவர் உயிரிழந்த சம்பவம் அலமாதி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி