திருவள்ளூர் மாவட்டம்
மேல்முதலம்பேடு ஊராட்சி குருத்தானம் பேடு கிராமத்தில் 9. லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தையும் மீஞ்சூரில் 10 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சாமு நாசர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர் பின்னர் அமைச்சர் சாமு நாசர் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி பேசுகையில்.
மீஞ்சூர் ஒன்றியத்தில் 190 கோடி ரூபாய் மதிப்பில் சமூக மேம்பாட்டு நிதி மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது தனக்கே பொறாமை அளிப்பதாக உள்ளதாகவும் ஐந்தாண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு பணி செய்து உள்ளார்கள் என்றும்
எங்கள் காலம் முடிந்து விட்டது இனி அடுத்த பொறுப்பிற்கு இளைஞர்கள் அமைச்சர்களாகவும் எம்எல்ஏக்களாகவும் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பிற்கு வர வேண்டும் அதற்கு வழிவிட்டு உங்களை வழிநடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என
அமைச்சர் சாமு நாசர் தெரிவித்தார் இதில் மாவட்ட குழு தலைவர் உமா மகேஸ்வரி மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.