எண்ணூர்: ஓராண்டுக்குள் சேதமடைந்தத கொசஸ்தலை ஆற்று கரைகள்

82பார்த்தது
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் தொடங்கி, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக பூண்டி நீர்தேக்கத்தை அடையும் கொசஸ்தலை ஆறு, திருவள்ளூர், தாமரைப்பாக்கம், வன்னிப்பாக்கம், நாப்பாளையம் வழியாக, 136 கி.மீ. தூரம் பயணித்து எண்ணூரில் வங்கக்கடலில் முடிகிறது. 

மழைக்காலங்களில், பூண்டி நீர்தேக்கம் நிரம்பும்போது, வெளியேற்றப்படும் உபரி நீரால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்கள் பாதிப்புக்கு உள்ளாவதும், அவ்வப்போது உடைப்புகள் ஏற்பட்டு அருகில் உள்ள கிராமங்கள் பாதிப்பிற்கு உள்ளாவதும் தொடர்கதையாகி வருவதாகவும், கடந்த காலங்களில், வன்னிப்பாக்கம், நாலூர், கம்மார்பாளையம், மடியூர், நாப்பாளையம், கொண்டக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆற்றின் கரைகள் உடைந்து, குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும் வெள்ளநீர் மூழ்கடித்து பெரும் பாதிப்புகளை உண்டாக்கியதாகவும், இதனால் பாதிப்புக்கு ஆளானதாகவும் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி