கவரப்பேட்டை: தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடர்

69பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் உள்ள ஆர். எம். கே ரெசிடென்ஷியல் பள்ளியில் 30வது தேசிய அளவிலான சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடர் துவங்கியது. சப் ஜூனியர் பிரிவில் 16 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளில் நடைபெறும் இத்தொடரில் 28 மாநிலங்களை சேர்ந்த 54 அணிகளில் 800 வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். தேசிய அளவிலான சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடரை ஆர். எம். கே கல்விக்குழுமங்களின் தலைவர் ஆர். எஸ். முனிரத்தினம், இந்திய நெட்பால் சம்மேளத்தின் தலைவர் சுமன் கவுசிக், பொதுச்செயலாளர் விஜேந்தர் சிங், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொருளாளர் செந்தில் தியாகராஜன் ஆகியோர் குத்து விளக்கேற்றி முறைப்படி துவக்கி வைத்தனர். 4நாட்கள் நாக் அவுட் முறையில் நடத்தப்படும் போட்டிகளில் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று காலிறுதி, அரையிறுதி போட்டிகளுக்கு தேர்வாகி இறுதி போட்டியில் வெற்றி வாகை சூடும் அணிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டிகளில் சிறந்து விளங்கி தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் 20 வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பெண்களுக்கான முதல் போட்டியில் தமிழ்நாடு அணியும், கோவா அணிகளும் மோதின தமிழ்நாடு அணி 25 - 4 கோல்கள் என்ற கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி