திருவள்ளூர்
தமிழகத்தில் மாம்பழம் சாகுபடி செய்யப்படும் முக்கிய மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டமும் ஒன்று. இம்மாவட்டத்தில் ஆரம்பாக்கம் ஏடூர் ஆரூர், தோக்கமூர் கும்மிடிப்பூண்டி, சாணாப்புத்தூர் கடம்பத்தூர், ஊத்து கோட்டை திருவாலங்காடு, பூண்டி, ஊத்துக்கோட்டை, ஆர். கே. பேட்டை, திருத்தணி பொன்படி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது மாம்பழ சீசன் நடைபெற்று வந்தாலும் சில்லறை விலையில் கிலோ ₹. 50 முதல் ₹. 80 வரை மாம்பழங்கள் விற்பனையாகின்றன.
அதிக வெயில் மற்றும் அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக மாம்பழம் மகசூல் குறைந்துள்ளது இதனால் மாம்பழம் தோட்டம் வைத்துள்ள , விவசாயிகள் மட்டுமன்றி லீசுக்கு எடுத்து பயிர் செய்து வருபவர்களும் வேதனை அடைந்து வருகின்றனர்.
மாம்பழ சாகுபடிக்கு தண்ணீர் மற்றும் மிதமான வெயில் உகந்தது. ஆரம்பாக்கம் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிக ஆழத்துக்குச் சென்றுவிட்டது. மேலும், வெயிலும் மழை மாறி மாறி விளைந்துள்ள மாங்காய்கள் மற்றும் பூக்கள் மீது பட்டு அதன் நிறத்தையும் தன்மையையும் மாற்றி உள்ளது இதனால் வியாபாரிகள் மக்களிடையே விற்பனை செய்ய முடியாமல் சுவை மிகுந்த ஆரம்பாக்கம் ஏடூர் கும்பிளி தோக்கமூர் மாம்பழங்களை கிலோ 30 ரூபாய்க்கு கூட விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வேதனை அடைந்து வருகின்றனர்