கும்மிடிப்பூண்டி: டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு சாலை மறியல்

59பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் சின்ன சோழியம்பாக்கம், பெரிய சோழியம்பாக்கம், மேட்டுகாலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1000 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலான ஆதிதிராவிடர் இன மக்கள் 100 நாள் வேலை திட்டம், விவசாயம், தனியார் துறையில் இரவு பகலாக சென்று செல்கின்றனர் இந்த பகுதியில் இயற்கை நிறைந்த சூழலாகும் இந்த நிலையில் பெரிய சோழியம்பாக்கம் விவசாய பகுதியில் ஏர்டெல் டவர் அமைப்பதற்கு ஏற்கனவே அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 98 பேர் சபரிமலை கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் இரவு பகலாக ஒரே நாளில் திடீரென ஆட்களை கொண்டு செல்போன் டவரை நிறுவப்பட்டது.
இதை அறிந்த கிராம மக்கள் சோழியம்பாக்கம் செல்லும் சாலையில் அமர்ந்து உடனடியாக செல்போன் டவரை அகற்றக்கோரி மரியில் ஈடுபட்டனர்.
பின்னர் கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது எங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைப்பு கூடாது என மனு கொடுத்தும் அமைத்துள்ளனர் என கூறியுள்ளனர் அதற்கு போலீசார் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கேட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி