பொன்னேரி - ஆலாடு சாலையில் வாகன ஓட்டிகள் சாகச பயணம்.

168பார்த்தது
பொன்னேரி - ஆலாடு சாலையில் வாகன ஓட்டிகள் சாகச பயணம்.
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட ஆலாடு சாலையில், பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு, அதில் சிமென்ட் உருளைகள் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. மேற்கண்ட சாலையில் திட்டப்பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து, அங்கு, சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூடாமல், அதன் மீது சாலை அமைக்கப்பட்டது. தொடர் வாகன போக்குவரத்தால், சில நாட்களிலேயே பொன்னேரி - ஆலாடு சேதம் அடைந்தது. சாலை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டு, தற்போது போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேற்கண்ட திட்டப்பணிகளுக்காக பதிக்கப்பட்ட சிமென்ட உருளைகளும் சேதம் அடைந்து உள்ளன. சாலையில் உள்ள பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் வளைந்து வளைந்து சாகச பயணம் மேற்கொள்கின்றனர். வேன், கார் உள்ளிட்டவை பள்ளங்களில் சிக்கி, அவற்றின் அடிப்பகுதி சேதம் அடைகின்றன. மழை பெய்தால், பள்ளங்களில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் பயணிக்கின்றனர். விவசாய பணிகளுக்கு செல்லும், டிராக்டர்கள் பள்ளங்களில் சிக்கி தவிக்கின்றன. மேலும், சாலையில் ஏற்பட்டு உள்ள பள்ளங்களால், பொன்னேரி- தத்தமஞ்சி வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து சரிவர மேற்கொள்ளப்படுவதில்லை.

தொடர்புடைய செய்தி