மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மத்திய பட்ஜெட் தாக்கலில் தமிழகம் முழுவதுமாக புறக்கணிக்கப் பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பாக
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவரும், தமிழக
முதல்வருமான முக. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் திமுக சார்பா௧ கண்டன ஆர்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்தும் ஒருதலைபட்சமாக செயல்படும் பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எதிரா௧ கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி