திருவள்ளூர் அருகே மறைந்த திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் புஜ்ஜி ராமகிருஷ்ணன் உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் அஞ்சலி.
திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் புஜ்ஜி ராமகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் திருவள்ளூர் அருகே ராமராஜ் கண்டிகை கிராமத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு கட்சியினர் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர், அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், எல்லாபுரம் அதிமுக முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அம்மணி மகேந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.