தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: ஜெயக்குமார்

67பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நடந்த அ. தி. மு. க. பிரமுகரின் இல்லத்திருமண விழாவிற்கு அ. தி. மு. க. , முன்னாள் அமைச்சரும், சபா நாயகருமான ஜெயக்குமார் மணமக்களை வாழ்த்தினார்.
தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களிடம்
பா. ஜ. க. , மத இன வாத அரசியலை கைவிட வேண்டும். இந்த அரசியலால் தான் வடமாநிலங்களில் மக்கள் பா. ஜ. கவுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர்.
தமிழகத்தில், இன்று, 6600 பணியிடங்களுக்கு அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 20 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர். தி. மு. க. , தலைவர் ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார். கடந்த, மூன்று ஆண்டுகளில் 6600 பேருக்கு மட்டுமே அரசு பணி என்றார்.

தொடர்புடைய செய்தி