காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் குலதெய்வ கோயிலில் சாமி தரிசனம்

85பார்த்தது
காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் குலதெய்வ கோயிலில் சாமி தரிசனம்
மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்கறிஞர் சுதா சொந்த கிராமத்தில் குலதெய்வ கோவிலில் நேர்த்திக்கடன்.


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதா மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து சொந்த ஊரான கும்மிடிப்பூண்டிக்கு வருகை தந்து குலதெய்வத்தை வழிபட்டார். ரெட்டம்பேடு சாலை திருப்பத்தில் உள்ள காமராஜர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கவுன்சிலர் மதன் மோகன், காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் சதீஷ் கட்சி நிர்வாகி பென்னிஷ், உள்பட பலர் உடன் இருந்தனர். மேலும் காங்கிரஸ் மற்றும் திமுக பேரூராட்சி கவுன்சிலர் கருணாகரன் கட்சி நிர்வாகிகளும் புதிய எம். பி. வழக்கறிஞர் சுதாவை வரவேற்றனர். காங்கிரஸ் நிர்வாகிகள் ஆரம்பாக்கம் பெரியசாமி. நகரத் தலைவர் பிரேம். ராமு ஆனந்தன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி