சென்னையிலிருந்து கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் சொகுசு கார் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள வரதய்யா பாளையம் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றபோது முன்னாள் சென்ற லாரியை முந்த முற்பட்டபோது நாய் குறுக்கே வந்ததில் கார் நிலை தடுமாறி தமிழக ஆந்திர எல்லையோர பகுதியான ஆரம்பாக்கம் அருகே பெரியவெட்டு குப்பம் பகுதியில் உள்ள மரத்தில் மோதி தலை குப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மரத்தின் மீது மோதியது இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த சம்ரீன் என்ற கல்லூரி மாணவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சொகுசு காரில் சென்ற ஒரு மாணவி 6 மாணவர்கள் படுகாயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்
விபத்துக்குள்ளானவர்கள் எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இது குறித்து ஆந்திர மாநிலம் தடா போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில, உயிரிழந்த பெண்ணின் உடல் மட்டும் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.