ஆன்லைன் பட்டா பெற லஞ்சம் வாங்கிய நில அளவையரை பிடித்த திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தனி வட்டாட்சியர் பிரிவில் பட்டா பிராம் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் ஆன்லைன் பட்டா விண்ணப்பித்துள்ளார். இந்த நிலையில் பட்டா வழங்க பரிந்துரை செய்ய நில அளவையர் 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சந்திரன் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிएஸ்பி கணேசனிடம் புகார் செய்த நிலையில், சந்திரனிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர்.
நில அளவை அலுவலர் சுமன் என்பவர் லஞ்சம் பெற முயன்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் கணேசன் தலைமையிலான போலீசார் தற்போது அவரை கையும் களவுமாக பிடித்து அவர் அறையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.