திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் வட்டாரத்திற்கு உட்பட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 301 அங்கன்வாடி காலி பணியிடங்களுக்கு மாவட்ட முழுவதிலும் இருந்து 7, 866 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி முதல் விண்ணப்பதாரருக்கு நேர்முக தேர்வு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது
ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் இன்று எல்லாபுரம் ஒன்றியத்தை சார்ந்த 286 விண்ணப்பதாரர்களுக்கு இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் தற்பொழுது தொடங்கி நடைபெற்று வருகிறது
மேலும் அங்கன்வாடி பணியாளர்களுக்காக நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கும் விண்ணப்பதாரருக்கு போதிய இருக்கை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காமல் உள்ளதால் மணி கணக்கில் வரிசையில் நின்றிருக்கும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது
எனவே இது போன்று விண்ணப்பதாரர்களை வரிசையில் காத்திருக்க வைக்காமல் போதிய ஏற்பாடுகளை செய்து இருக்கை குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது