தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டிகள் மாணவர்கள் சாதனை

52பார்த்தது
கும்மிடிப்பூண்டியில் வினா ஸ்ரீ யோக பயிற்சி மையம் நடத்தும் ஐந்தாம் ஆண்டு தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் வினா ஸ்ரீ யோக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தும் 5-ஆம் ஆண்டு தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டிகள் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற காளத்தீஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்றது. போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, பாண்டிச்சேரி, கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 800 - க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.  

ஆண் பெண் இருபால் மாணவர்களுக்கும் இடையே பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றதில் பெண்கள் பிரிவில் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த வினா ஸ்ரீ யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய மாணவி எஸ். ஜெய் ஸ்ரீதனா (9) சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அதேபோல் ஆண்கள் பிரிவில் வினா ஸ்ரீ யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய மாணவன் எம். ஹரிஷ் (12) கோப்பையை தட்டிச் சென்றார். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அம்பத்தூரைச் சேர்ந்த ருத்ரப்பா தனியார் பள்ளி வென்றது. வெற்றியாளர்களுக்கு கோப்பையுடன் கூடிய பரிசு பொருட்கள், கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி