திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வசந்த பஜாரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் அருண் குமார் (23). இவர், கும்மிடிப்பூண்டி பஜாரில் அசைவ ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த ஞாயிறு இரவு வழக்கம் போல் ஓட்டலை மூடிவிட்டு அருண் குமார் தனது வீட்டிற்கு சென்று விட்டார். இப்பொழுது அதிகாலை ஹோட்டலின் உள்ளே நுழைந்து பார்த்தபோது கல்லாப்பெட்டி திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு ஹோட்டல் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதை எடுத்து சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த கும்மிடிப்பூண்டி போலீசார் திருட்டில் ஈடுபட்ட பொன்னேரி அடுத்த மிளகு மேடு கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் ஒருவனை கைது செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.