காக்களூர் ஏரி தாமரைக் குளம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இரண்டு கோடியே 27 லட்சத்தில் சீரமைக்கும் பணி அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் காக்களூர் ஊராட்சியில் தாமரைக் குளம் மற்றும் காக்களூர் ஏரி மேம்படுத்தும் பணிகள் ரூபாய் 2 கோடி 27 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நேற்று பூமி பூஜையுடன் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சாமு நாசர் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.