திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் 26-ந்தேதி குடியரசு தினம் ஆகிய 2 நாட்களும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுபான பார்கள், முன்னாள் படை வீரர் மது விற்பனை கூடங்கள் ஆகியவற்றை மூடி வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.