மாதவரம்: கார் உதிரிபாகங்கள் கிடங்கில் திடீர் தீ விபத்து

2பார்த்தது
மாதவரத்தில் உள்ள கார் உதிரிபாகங்கள் கிடங்கில் திடீர் தீ விபத்து இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த மாதவரம், வியாசர்பாடி, அம்பத்தூர், செம்பியம் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து நான்கு வாகனங்கள், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் கரும் புகை சூழ்ந்துள்ளது. செங்குன்றம், மாதவரம், ரவுண்டானா அருகே உள்ள இரண்டு ஏக்கரில் ப்ளீச்சிங் பவுடர், கார் உதிரிபாகங்கள், தனியார் கொரியர் நிறுவனம் போன்ற ஆறுக்கும் மேற்பட்ட கிடங்குகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென்று கார் உதிரிபாகங்கள் கிடங்கு தீ பற்றி மலமல எரிந்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த மாதவரம், மணலி, வியாசர்பாடி, அம்பத்தூர், செம்பியம் போன்ற தீயணைப்பு நிலையங்களிலிருந்து ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்கு கடுமையாக போராடி வருகின்றனர். தற்போது வரை தீ இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அந்தப் பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்துள்ளது. விடுமுறை நாட்கள் என்பதால் பணியாளர்கள் யாரும் இல்லை. தீ முற்றிலும் அணைக்கப்பட்ட பிறகு தீ விபத்துக்கான காரணம் தெரியவரும். இதனால் அந்த பகுதி தற்போது பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.