எரிவாயு கசிந்து உடல் கருகி முதியவர் பலி

70பார்த்தது
எரிவாயு கசிந்து உடல் கருகி முதியவர் பலி
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கோபால் (66). இவரது மனைவி காலமாகிவிட்டார். இவர்களது இரு மகன்களுக்கும் திருமணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வீட்டில் தனியாக வசித்து வந்த கோபாலை, அவரது மகன்கள் அடிக்கடி வந்து கவனித்து வந்தனர். செவ்வாய்க்கிழமை மதியம் கோபால் வீட்டில் உள்ள எரிவாயு அடுப்பில் பால் காய்ச்சிய போது, பால் கொதித்து வெளியேறி அடுப்பில் எரிந்த தீ அணைந்துள்ளது. இதைக் கவனிக்காமல் கோபால் பாலை இறக்கி வைத்துவிட்டுச் சென்றார். பின்னர், இரவு 7 மணி அளவில் கோபால் அடுப்பைப் பற்ற வைத்த போது, வீடு முழுவதும் எரிவாயு கசிந்து இருந்த நிலையில் தீப்பிடித்தது.

 இதில், கோபாலின் உடலில் தீப்பற்றி கருகி உயிருக்குப் போராடினார். தீ விபத்தில் வீட்டில் இருந்த கதவு ஜன்னல்கள், பொருள்கள் சேதமடைந்தன. தகவலறிந்து ஆவடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கோபாலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், புதன்கிழமை கோபால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆவடி காவல் ஆய்வாளர் டெல்லிபாபு தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி