மூதாட்டி உயிரிழப்பு-கிராம நிர்வாக அலுவலர் புகார்

362பார்த்தது
மூதாட்டி உயிரிழப்பு-கிராம நிர்வாக அலுவலர் புகார்
கடம்பத்துார் அடுத்த ஏகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கம்மாள் (வயது 85). இவர் கடந்த மாதம் 26ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.

உறவினர்கள் யாருமில்லாததால் அருகிலிருந்த பார்த்திபன் என்பவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சொக்கம்மாள் உயிரிழந்தார்.

இதுகுறித்த ஏகாட்டூர் கிராம நிர்வாக அலுவலர் சுகுமார் கொடுத்த புகாரின்படி கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி