கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

82பார்த்தது
கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் லேசான காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது.


அதேபோல் கவரப்பேட்டை, புதுவாயில், தச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறைக்காற்று, இடியுடன் கூடிய கனமழையானது கொட்டி தீர்த்ததால் ஆங்காங்கே சாலையில் மழை நீரானது வழிந்தோடியதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் பாதிப்புக்கு பாதிப்புக்குள்ளானார்கள்.
மேலும் இந்த மழையின் காரணமாக பள்ளி கல்லூரி மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வீடுகளுக்கு திரும்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாய பாதிப்பு என்று பார்த்தால் கும்மிடிப்பூண்டியை ஒட்டியுள்ள ஆத்துபாக்கம் பகுதியில் மட்டும் நெல் பயிர் அறுவடை செய்யாததால் அப்பகுதியில் மட்டும் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை தச்சூர் பொதுவாயில் சுண்ணாம்பு குளம் உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்ட நெல்பயிரானது வெயிலின் தாக்கத்தால்
பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பெய்த மழையால் புத்துயிர் பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.
இதனால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி