திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் குஷா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் மழை காலங்களில் பழுது ஏற்படுவதை தொடர்ந்து அத்தரை பாலத்தினை மாண்புமிகு கைத்தறி(ம) துணிநூல்துறை அமைச்சர் காந்தி அவர்கள் ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில்புதிய பாலம் அமைப்பது குறித்து அலுவலர்களோடு ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.