மக்களைத் தேடி மேயர் (2023-2024) குறைதீர் முகாம்

182பார்த்தது
மக்களைத் தேடி மேயர் (2023-2024) குறைதீர் முகாம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு. முக. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி , மாண்புமிகு அமைச்சர், மாவட்ட செயலாளர் திரு. சேகர்பாபு அவர்களின் ஆலோசனைப்படி, அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-7, மக்களைத் தேடி மேயர் (2023-2024) குறைதீர் முகாம் சென்னை மாநகராட்சி மேயர் திருமதி. ப்ரியாராஜன் அவர்களின் தலைமையில் கொரட்டூர் சுவாதி பேலஸில் நேற்று காலை 10. 00 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் கலந்து கொண்டு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர், மண்டல குழு தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி