பாசிச பாஜக ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

79பார்த்தது
பாசிச பாஜக ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று காலை 10: 00 மணி அளவில், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், ஆவடி மாநகராட்சி அருகில் உள்ள கலைஞர் திடலில், தமிழ்நாட்டை புறக்கணித்த ஆளும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டையும், பாசிச பாஜக ஒன்றிய அரசையும் கண்டித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சாமு நாசர் கலந்து கொண்டு ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையை கண்டித்து கண்டன உரை ஆற்றினார். உடன் திரு கிருஷ்ணசாமி MLA, திரு K J ரமேஷ், திரு ஜெரால்டு, திரு V J சீனிவாசன், திரு ஜெயபாலன், திருமதி காயத்ரி ஸ்ரீதரன், திரு பா. நரேஷ் குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் த. எத்திராஜ், கு. விமல் வர்ஷன், எம். முத்தமிழ் செல்வன், V குமார், S காஞ்சனா சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஆவடி மாநகர மேயர் திரு உதயகுமார், மாநகர பொறுப்பாளர் திரு சன் பிரகசாஸ், உள்ளிட்ட நகர, பகுதி, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி