திருத்தணி அருகே 2000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ நூக்காளம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மா சத்திரம் அடுத்த நெடும்பரம் கிராமத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ நூக்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது,
இக்கோவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது
திருக்கோயில் வளாகத்தில் 9 யாக குண்டங்கள் அமைத்து யாகசாலை பூஜை செய்து கணபதி பூஜை செய்து, முதல் யாகசாலை பூஜை, சிறப்பு தீப ஆராதனை, புனித கலசங்கள் பூஜை செய்யப்பட்ட கலசங்களை வேதாச்சாரியார்கள் மங்கள இசைவாதியுங்கள் முழங்க கலச புறப்பாடு நடைபெற்றது
இதனைத் தொடர்ந்து திருக்கோயில் மேல் உள்ள புனித கலசங்களுக்கு கும்பாபிஷேக புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது , சிறப்பு தீப ஆராதனையும் நடைபெற்றது
இதனைத் தொடர்ந்து மூலவர் நூக்காளம்மன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் சிறப்பு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது,
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் புனித கலச தண்ணீர் தெளிக்கப்பட்டது , மேலும் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிதண்ணீர் வழங்கப்பட்டது.