*இரட்டை இலைக்கு தீவிர வாக்கு சேகரிப்பு
திருவொற்றியூர்.
வடசென்னை மக்களவை தொகுதிஅதிமுக வேட்பாளர் ராயபுரம் ஆர். மனோவை ஆதரித்து திருவொற்றியூர் தொகுதியில் உள்ளஅண்ணா தொழிற் சங்கத்தினர் எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவனம் திருவொற்றியூர் எம் ஆர் எப் நிறுவன நுழைவாயிலில் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் டி. ரமணகுமார் தலைமையில் மாவட்ட தலைவர் எம். சுந்தர் முன்னிலையில் இணைசெயலாளர்என். சௌந்தர் ஆட்டோபாபு துணைத் தலைவர்கள் ஆட்டோ பாண்டியன் ஆர். கிரி அசோக் லேலண்ட் செயலாளர்
தேவஅன்பு மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இரட்டை இலை சின்னத்திற்கு தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தனர்.
அதேபோல் திருவொற்றியூர் 13வது வட்டத்தில் வட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர்
வி. டி. எஸ். இன்ப நாதன் தலைமையில் வட்ட நிர்வாகிகள் வசந்த நகர் மனோகரன்
ஆர். தட்சிணா மூர்த்தி. பி. ஜே. ஆர் ஸ்டீபன். வி. சி. கந்தன். ஜெகதீஸ்வரன். சரஸ்வதி விஜயா சேகர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சாத்தாங்காடு மேட்டுத்தெரு கிராம தெரு ஐயா பிள்ளை தோட்டம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.