திருநின்றவூர்: நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத நீர்வள ஆதாரத்துறை
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் உள்ள ஈசா ஏரியிலிருந்து மூன்று போகம் விவசாய பாசனத்திற்கு பயன்படும் ஏரி நீரை பாசனத்திற்கு பயன்படாதபடி தண்ணீரை மதகு வழியாக வெளியேற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செயலுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறி தண்ணீரைத் திறந்து விட்ட மாவட்ட வருவாய்த்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.