கணவனின் கள்ளக்காதலால் பெண் தற்கொலை முயற்சி

5480பார்த்தது
கணவனின் கள்ளக்காதலால் பெண் தற்கொலை முயற்சி
ஆவடி அடுத்த உப்பரபாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவரது மனைவி நந்தினி (வயது 35). தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மணிகண்டன், சொந்த ஊரான கடலுார் மாவட்டத்தில் வேலை செய்து வந்தார். மணிகண்டன் அடிக்கடி சொந்த ஊர் செல்லும்போது, அண்ணி சுபத்ராவுடன் நட்பு ஏற்பட்டு பின் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன் அவரது இரண்டு வயது மகனை, நந்தினிக்கு தெரியாமல் கடைக்கு செல்வதாக கூறி மணிகண்டன் துாக்கி சென்றார். நீண்ட நேரம் ஆகியும் மணிகண்டன் வராததால் சந்தேகமடைந்த நந்தினி உறவினர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது, சுபத்ராவையும் காணவில்லை என உறவினர்கள் கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த நந்தினி, இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்து ஐந்து நாட்களாகியும் குழந்தை கிடைக்காததால் நந்தினி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி