முதல்வர் வருகையால் விழாக்கோலம் பூண்ட திருவள்ளூர்

78பார்த்தது
திருவள்ளூர் அருகே உள்ள திருப்பாச்சூரில் கிராமத்தில் அமைந்த தனியாருக்கு சொந்தமான இடத்தில் கலைஞர் திடல் அமைத்து அதில் திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது இதில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார் இதில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ராணிப்பேட்டை சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் திரளாக பங்கேற்க உள்ளனர் முதல்வர் பங்கேற்கும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் தீயணைப்பு வீரர்கள் காவல்துறையினரின் வாகனங்களை நிறுத்த இடம் இன்றி போலீசாரே ஜேசிபி மற்றும் ரோடு ரோலர் உதவியுடன் வாகன நிறுத்தத்தை சீர் செய்தனர் நேற்று பெய்த மழைக்கு கண்டன பொது கூட்டம் மேடைக்கு முன்பு தண்ணீர் தேங்கி சேரும் சகதியமாய் மாறி உள்ளது அதில் மண்ணைக் கொட்டி சீர் செய்யும் பணியில் தொடர்ந்து தற்போது வரை முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி