ஆவடியில் ஆறு இன்ஸ்.. பணியிட மாற்றம்

767பார்த்தது
ஆவடியில் ஆறு இன்ஸ்.. பணியிட மாற்றம்
ஆவடி ஆணையரகத்தில் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றிய சங்கர், பட்டாபிராம் சட்ட ஒழுங்கு ஆய்வாளராகவும், மாங்காடு சட்ட ஒழுங்கில் பணியாற்றிய ராஜி, மாதவரம் பால் பண்ணை குற்றப்பிரிவு ஆய்வாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். வெள்ளவேடு சட்ட ஒழுங்கில் பணியாற்றிய இளையராஜா, மணலி குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், செங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றிய சுபாஷினி, எஸ். ஆர். எம். சி. , குற்றப்பிரிவு ஆய்வாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். எஸ். ஆர். எம். சி. , குற்றப் பிரிவில் பணியாற்றிய பிரபாகர், செங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளராகவும், எண்ணுார் குற்றப் பிரிவில் பணியாற்றிய லாரன்ஸ், வெள்ளவேடு சட்ட ஒழுங்கு ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி