ரூ. 80 லட்சம் நில மோசடி; பா.ஜ.க பிரமுகர் கைது

582பார்த்தது
ரூ. 80 லட்சம் நில மோசடி; பா.ஜ.க பிரமுகர் கைது
கிண்டி, மடுவன்கரையைச் சேர்ந்த மொகிதீன் பாத்திமா பீவி என்பவர், கடந்தாண்டு அக்டோபரில், ஆவடி மத்திய குற்றப் பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதன் விபரம்:

கொரட்டூர், கள்ளிக்குப்பம் ஹாஜி நகரில், 2, 347 சதுர அடி நிலம் இருந்தது. பத்மநாபன் என்பவர், இந்த நிலத்தை அபகரிக்க திட்டமிட்டு, என்னை போல் ஆள்மாறாட்டம் செய்து, போலியான பொது அதிகார பத்திரம் தயார் செய்துள்ளார்.

அதன் வாயிலாக பாலகிருஷ்ணன், பிரபு, வேலு என்பவர்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இதன் மதிப்பு, 80 லட்சம் ரூபாய். எனவே, நில மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புகார் குறித்து விசாரித்த ஆவடி மத்திய குற்றப் பிரிவு போலீசார், செங்குன்றம், சோலை மாநகரைச் சேர்ந்த பத்மநாபன், 49, என்பவரை, நேற்று கைது செய்தனர். இவர், சோழவரம் பா. ஜ. , தெற்கு ஒன்றிய தலைவராக இருப்பது விசாரணையில் தெரிந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி