ஆவடி மாநகராட்சியை கண்டித்து போராட்டம்

1286பார்த்தது
ஆவடி மாநகராட்சியை கண்டித்து போராட்டம்
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 37வது வார்டு சேக்காடு வி. ஜி. என் காஸ்மாக்' தனியார் குடியிருப்பில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புவாசிகள் ஆவடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரியையும் முறையாக செலுத்தி வருகின்றனர்.

ஆனால் மாநகராட்சி சார்பில் சாலை, மின்விளக்கு, மழைநீர் வடிகால் உள்ளிட்ட எந்த வசதியும் செய்து தரவில்லை என கூறப்படுகிறது. அதேபோல், இப்பகுதியில் கழிவுநீர் வெளியேற வசதி இல்லாததால், சேக்காடு சுற்றுவட்டாரத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் குடியிருப்பு பகுதி மற்றும் அங்குள்ள இரண்டு பூங்காக்களில் தேங்கி நிற்கிறது.

இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பை சுற்றியுள்ள சாலைகளில் மின் விளக்கு இல்லாததால், சமூக விரோதிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஆவடி மாநகராட்சியின் அலட்சிய போக்கை கண்டித்து, நேற்று இரவு 50க்கும் மேற்பட்டோர் இருள் சூழ்ந்த சாலைகளில் மாநகராட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அப்பகுதிவாசிகள் ஒன்று சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும், சாக்கடையை பக்கெட்டில் அள்ளி மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி