போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்ற காவல்துறை

65பார்த்தது
ஆவடி காவல் ஆணையர் சங்கர் இளைஞர்கள் மாணவர்கள் இடையே போதைப் பொருட்கள் பயன்பாடுகளால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழியேற்றனர்

திருவள்ளூர்மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை இளைஞர்கள் மாணவ, மாணவியர்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக கிரிக்கெட்போட்டியை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர்ஐபிஎஸ் தொடங்கி வைத்து உறுதிமொழியை ஏற்று இளைஞர்கள் மற்றும் காவல்துறையினரின் இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு கையெழுத்து இயக்கத்தினையும் நடத்தி வைத்தார்
தமிழகத்தை போதையில்லா மாநிலமாக உருவாக்கும் விதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவில் காவல்துறையினர் மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர் அதன் ஒரு நிகழ்வாக ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஆவடி தனியார் கல்லூரியில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் இரு சக்கர வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன் தமிழக முதலமைச்சர் காணொளியில் உறுதிமொழி படிவத்தை வாசிக்க அதை அனைவரும் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றனர்

தொடர்புடைய செய்தி