அரசு பேருந்தை தள்ளு தள்ளு என பயணிகள்

50பார்த்தது
கும்மிடிப்பூண்டியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை தள்ளு தள்ளு என பயணிகள் தள்ளி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது


சுண்ணாம்பு குளம் கல்லூர் பகுதியிலிருந்து சென்னை செங்குன்றம் வரை செல்லக்கூடிய 90-B என்ற வழித்தட பேருந்து செங்குன்றத்திலிருந்து சுண்ணாம்பு குளம் செல்லும் வழியில் கும்மிடிப்பூண்டி பகுதியில் புறப்படும் போது திடீரென பழுது ஏற்பட்டது.

பழுதை சரி செய்ய ஓட்டுனரும் நடத்துனரும் முயற்சித்த நிலையில் முயற்சி தோல்வி அடைந்ததால் பேருந்தில் பயணம் செய்து வந்த ஆண் பெண் பயணிகள் உட்பட நடத்துனரும் சேர்ந்து பேருந்து கும்மிடிப்பூண்டியின் பிரதான சாலையாக விளங்கக்கூடிய GNT சாலை நடுவே தள்ளு தள்ளு தள்ளு திரைப்பட நகைச்சுவை பாணியில் தள்ளிச் சென்றது பொதுமக்கள் மத்தியிலும் சக பயணிகள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி