முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கட்சியினர் மோதல்: வீடியோ

69பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருப்பாச்சூர் பகுதியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா. மு. நாசர் தலைமையில் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்ற பகுதியில் மேடையின் அருகே கட்சி பொறுப்பாளர்களுக்கு என்று தனியாக அமர்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திமுக கட்சி பொறுப்பாளர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டடு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் வர சில நிமிடங்கள் இருந்த நிலையில் கட்சி பொருப்பாளர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி