நிலவொளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

56பார்த்தது
நிலவொளியம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட நம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நில ஒலி அம்மன் தீ மிதி திருவிழா கடந்த நான்காம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு

பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வானது நடைபெற்றது காப்பு கட்டிய பக்தர்கள் கரகம் ஏந்தி ஊர் எல்லைகளை மிதித்து அம்மனுக்கு கூழ் வார்த்து பொங்கல் படையல் இட்டு விரதம் மேற்கொண்டு வந்தனர்

தமிழ் வருட பிறப்பான 14ஆம் தேதி காலை பால்குடம் ஏந்தி நில ஒளி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது

மாலை காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் இரவு சுமார் ஏழு முப்பது மணிக்கு மேல் வானவேடிக்கை மேல தாளங்கள் முழங்க மஞ்சள் ஆடை அணிந்து நிலவொளி அம்மன் ஆலயம் எதிரில் அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்



இதில் நம் பாக்கம் அரியபாக்கம் கிருஷ்ணாபுரம் பூண்டி சென்றாயன் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்

மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் பென்னல்லூர் பேட்டை காவல் நிலையத்தார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி