திருவள்ளூரில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
மத்திய பாஜக அரசு தமிழகத்தை புறக்கணிக்கும் விதமாக கொண்டு வந்த நிதிநிலை அறிக்கை கண்டிக்கும் விதமாக மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது
திருவள்ளூரில் இடதுசாரி கட்சிகள் பாரத ஸ்டேட் வங்கி முன்பு மத்திய பட்ஜெட் தமிழகத்தை புறக்கணித்ததை கண்டித்து பாஜக அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட இடதுசாரி அமைப்பினர் சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர் கோபால் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்