திருவள்ளூர்: கார் திருடன் அதிரடி கைது

65பார்த்தது
திருவள்ளூர்:  கார் திருடன் அதிரடி கைது
திருவள்ளூர் மாவட்டம், கபிலன் நகர் , சன்னதி தெருவை சேர்ந்த சதீஷ்குமார்(38) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மதியம் தனது காரில் மதுரவாயல் மார்க்கெட்டிற்கு சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு செல்லும் வழியில் மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் உள்ள டீக்கடையில் காரை நிறுத்திவிட்டு சாவி எடுக்காமல் கடைக்கும் சென்று டீ குடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது அவருடைய கார் காணாமல் போனது தெரிய வந்தது இதனை அடுத்து சதீஷ்குமார் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நிலையில் காரை திருடி சென்றது மதுரை ஒத்தக்கடையைய் சேர்ந்த அழகர் என்கிற அழகர்சாமி (25) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவர் திருடி சென்ற காரை பத்திரமாக மீட்டனர். அந்த நபரை விசாரணை செய்ததில் திருடுவதற்காக பேருந்து மூலம் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து காரை திருடி சென்றதும் பின்பு போலீஸில் சிக்கியதும் தெரிய வந்தது. மேலும் அந்த நபர் மீது ஏற்கனவே தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்டங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அந்த நபரை புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி