பொன்னியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

71பார்த்தது
ஆவடி அருகே பாடி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னியம்மன் திருக்கோவிலில் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ராஜா சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகளை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் யாகசாலையில் கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க பூஜை செய்து கோபுர கலசங்களுக்கு புனித நீராட்டினார்கள். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஓம் சக்தி பொன்னியம்மன் சக்தி என்று பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர் ஒருவரின் குழந்தைக்கு பெயர் வைத்த சஞ்சீவினி சுவாமிகள் அதைத்தொடர்ந்து பேட்டி அளித்த சஞ்சீவினி ராஜா சுவாமிகள் அப்பொழுது அவர் பேசுகையில் இங்கு உள்ள பொன்னியம்மன் மிக நீண்ட காலமாக இங்குள்ள பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்ததாகவும் ஆகையால் தான் குடிசையில் இருந்த கோவில் தற்போது மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதாகவும் இங்குள்ள அம்மனை அனைவரும் தரிசனம் செய்து வளமுடன் வாழ வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி