சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி பொன்னேரி தாலுகாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்புப் பணிகள் துறை சார்பில் நடைபெற்ற ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நிகழ்வில் மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கலந்துகொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தார். சோழவரம் ஊராட்சிக்குட்பட்ட சோழவரம், பழைய எருமைவெட்டிப் பாளையம், புதிய எருமைவெட்டிப் பாளையம் மற்றும் பாடியநல்லூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன் பெற்றனர். உடன் ஒன்றியச் செயலாளர் கருணாகரன் இருந்தார்.