திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர சிகிச்சை (ம) மீட்பு மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இம்மையத்தினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்து தேசிய தன்னார்வ இரத்தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு பெருமளவில் இரத்ததானம் செய்த 29 இரத்ததான முகாம் ஏற்பாட்டாளர்களுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டினார்.